கோவை ரயில் நிலையத்தில் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் தீவிரம்

கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்துள்ளது.

கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்துள்ளது.



கோவை மத்திய ரயில்நிலையமானது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகும். தினந்தோறும் ரயில் நிலையத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய 2100 யூனிட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, இந்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சோலார் சக்தி மூலம் மின்சக்திப் பெற ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, அதிக மின் உற்பத்திக்காக நடைமேடை எண் 1 மற்றும் 2 -ன் மேல் பகுதியில் உள்ள கூரையில் 100 kW சோலார் தகடுகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இனிமேல், இதன் மூலம் தினமும் 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ரயில் நிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " தற்போது 100 kW சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மாதம் 50 KW சோலார் தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 675 யூனிட் மின்சாரம் கிடைக்கும். எதிர்வரும் காலத்தின் 2100 யூனிட் மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் தகடுகள் பொருத்தப்படும்," என்றார்.



மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய சோலார் தகடுகள் பொருத்தப்படுவதால் ரயில் நிலையத்தின் மின்சார செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...