வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், தஞ்சை பெரிய கோயிலில் யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், தஞ்சை பெரிய கோயிலில் யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். கோவில் வளாகத்தைச் சேதப்படுத்தும், அதிக கட்டண வசூல் செய்து நடத்தப் போகும் இந்த நிகழ்வினைத் தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீல் முத்துக்கிருஷ்ணன் மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தொல்லியல் துறை எந்த விதிமுறையின்படி நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையினரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
அதற்கு தொல்லியல்துறை தரப்பில், பஜன் நடத்தவே அனுமதி வழங்கியதாகவும் பந்தல் போடவோ, தியான நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த அனுமதியைக் கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, கோவிலினுள் இருந்த பந்தல் உள்ளிட்டவை அகற்றப்பட்டடுள்ளது. அதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என தொல்லியல் துறையிடம் அடுத்தடுத்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சைப் பெரிய கோவில் தேவஸ்தான இணை ஆணையர், மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பு பொறியாளர், வாழும் கலை அமைப்பிற்கு அனுமதி வழங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.