கோவை : தடாகம் பகுதியில் தொடரும் மனித விலங்கு மோதல்களைத் தடுக்க வனத்துறையினர் மண்கரையில் நிரந்தர முகாம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கோவையில் தடாகம் பகுதியில் தொடரும் மனித விலங்கு மோதல்களைத் தடுக்க, ஏற்கனவே அங்கு முகாமிட்டு வனத்துறையினர் முயன்று வருகின்றனர். இந்நிலையில், யானைகளைக் கட்டுப்படுத்த முடிகிறதே தவிர காட்டுக்குள் முழுவதுமாக அனுப்பி வைக்க முடியவில்லை. இதையடுத்து, மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு புதிய முகாம் அமைப்பது குறித்தான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை அதிகாரிகள் அங்கீகரித்ததும் அது தொடர்பான வேலைகள் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், "தொடர்ந்து நடைபெறும் காட்டு யானைகளின் மோதலின் காரணமாக இந்தப் பகுதியில் முகாம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிகழும் தொடர் பயிர் சேதங்கள் இந்த முடிவின் மற்றுமொரு முக்கிய காரணம். தற்சமயம் 4 கும்கி யானைகளையும் பெரிய தடாகத்தில் வைத்துள்ளோம். முன்பாக வாசிம், விஜய், பொம்மன் ஆகிய மூன்று கும்கி யானைகளும் நீலகிரியில் இருக்கும் போது, சேரன் சாடிவயல் முகாமில் இருந்தது.
மேலும், இந்தக் கும்கி யானைகளைக் கொண்டுதான் காட்டு ஆண் யானைகளான விநாயகம் மற்றும் சின்னதம்பியை கட்டுக்குள் வைக்க முடிந்தது. அதனால் இங்கு நிரந்தர முகாம் அமைத்துக் காட்டு யானைகளைத் தடுக்கும் விதமாக செயல்பட உள்ளோம்," என்றனர்.
தற்போது, சாடிவயலில் இருக்கும் ஜான் மற்றும் சேரன் ஆகிய கும்கிகளை இடமாற்றம் செய்வதா அல்லது புது கும்கிகளை வரவழைப்பதா என்பதை வனத் துறை அதிகாரிகள் விரைவில் முடிவு செய்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.