கோவை : கோவை மாநகராட்சியில் ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளை செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகராட்சியில் ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளை செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

கோவையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 89 -வது வார்டின் மேம்பாட்டுக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமிபூஜை செய்து தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து, அண்ணா நகர் பின்புறம் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.21.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதைப்போலவே, வார்டு எண்.89 விசாலாட்சி நகர் மற்றும் நாயக்கர் வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.6 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியும், ராதாராம் நகர் பகுதியில் ரூ.28.9 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், 89 -ம் வார்டு பகுதியான இந்தியன் வங்கி காலனி பகுதியில் பொது நிதியிலிருந்து ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியும், அதனைத் தொடர்ந்து அதே வார்டைச் சேர்ந்த பாக்யா நகர் மற்றும் சமீம் கார்டன் பகுதியிலும் ரூ.9.9 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணியினை செயலாக்கத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நேற்று, அடுத்தடுத்து 5 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வளர்ச்சிப் பணிகள் திட்டம் மொத்தமாக ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.