திருப்பூர் : திருப்பூர் அருகே 7 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை, போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஹனிபா (62) என்பவர் திருப்பூர் வீரபாண்டி பிரிவு, குப்பாண்டம்பாளையம் பகுதியில் குடியிருந்து கட்டிட தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குழந்தையின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பிடித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஹனிபாவை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூரில் தொடர்ந்து குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடைபெறுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.