கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெறவுள்ள யானைகள் நல்வாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோரப் பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கோவில் யானைகளுக்கான நல்வாழ்வு புத்துணர்வு முகாம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் 48 நாட்கள் நடைபெறும் இந்த யானைகள் நல்வாழ்வு முகாம், இதே பகுதியில் கடந்த 2012-ம் முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏழாம் ஆண்டாக இங்கு யானைகள் முகாம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கி, நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த யானைகள் முகாம் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. இதன் காரணமாக, முகாம் நடக்கும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து விடுவதாகவும், இதனால் கடும் சேதங்கள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில், கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், கோவில் யானைகளை அழைத்து வந்து முகாம் நடத்தப்படுவதால், இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து கடும் சேதங்கள் ஏற்படுவதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து டிசம்பர் 14-ம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. முகாம் அமைக்கும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இங்கு யானைகள் நல்வாழ்வு முகாம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தேக்கம்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் வீதிகளில் கருப்புக்கொடிகளை கட்டியுள்ளனர். மேலும், வரும் 14-ம் தேதி முகாம் நடைபெறவுள்ள பகுதியில் கிராம ஒருங்கிணைப்பு குழு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.