கோவை : 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதை கோவை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
கோவை : 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதை கோவை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த வாக்குகள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இதைப்போலவே, சட்டிஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தெலுங்கானாவில் பெரும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும், அங்கு ஆளும் தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி வெற்றி பெற்றது. ஐந்து வடமாநில தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியை வீழ்த்தி 3 இடங்களில் வெற்றி பெற்றதை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை காங்கிரஸ் கட்சியி மாநகர மாவட்ட தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில், ரயில் நிலையம் பகுதியில் கொண்டாட்ட விழா நடைபெற்றது. அதில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், கோவை காங்கிரஸ் கட்சியினர் வெற்றி குறித்து கூறுகையில், காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும், அதற்கு இந்த மூன்று வடமாநில வெற்றி ஒரு முன்னோட்டம் எனத் தெரிவித்தனர்.