நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை பொதுமக்கம் கூட்டம் கூடியதால் அச்சத்தில் கம்பி வேலியை பிய்த்துக் கொண்டு ஓட்டமெடுத்தது.

சமீபகாலமாக குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுத்தை கரடி, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று குன்னுார் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் 3 வயதுள்ள சிறுத்தை ஒன்று கம்பியில் சிக்கியுள்ளது.
அதனைக் கண்ட அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். அதில் சிலர் வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்தச் சிறுத்தையின் கால் வேலியில் சிக்கியபடி, அது மேற்புறத்தில் சிமெண்ட் கம்பத்தின் மேற்புறத்தில் நின்று தவித்துக் கொண்டிருந்தது.
இந்த இக்கட்டான சுழலில் அங்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தனர். பொதுமக்கள் கூடியதால் அச்சம் அடைந்த சிறுத்தை 1 மணிநேரம் தவித்த பின் கம்பியை பிய்த்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் ஒடி மறைந்தது. இதையடுத்து தப்பியோடிய சிறுத்தையைக் கண்காணிக்குமாறு தேயிலை தோட்ட தொழிலாளர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.