கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 -வது தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி உறுப்பினர்களின், உறுப்பினர் உரிமை சீட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை போன்ற பல்வேறு கட்டப் பணிகள் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலில், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது. முதலாவதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், தலைமை கழக பிரதிநிதியுமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோர் இணைந்து மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கிடம் உறுப்பினர் உரிமை சீட்டை வழங்கினார்.

இதற்கிடையில், வடகோவையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கழக சொத்து பாதுகாப்புக்குக் குழு துணைத் தலைவர் பொங்கலூர்.பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமசாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு பகுதி கழகங்களில் உள்ள வட்டக்கழகங்களிலும் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒருவாரம் உறுப்பினர் சீட்டு வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் வழங்கப்பட்ட உறுப்பினர் சீட்டு தொடர்பான எண்ணிக்கை வெளியாகும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.