குளிர்காலத்தையொட்டி குன்னூரில் தேயிலை விற்பனை அதிகரிப்பு : ரூ.1 கோடிக்கும் மேல் வருவாய்

நீலகிரி : குளிர்காலம் தொடங்கியதை அடுத்து குன்னூரில் தேயிலை விற்பனையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது.


நீலகிரி : குளிர்காலம் தொடங்கியதை அடுத்து குன்னூரில் தேயிலை விற்பனையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது. 



நீலகிரி மாவட்டம் குன்னூரில் 'டீசர்வ்' தேயிலைஏலத்தில், நீலகிரியில் உள்ள 15 கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைதுாள் மொத்தமாக ஏலம் விடப்படுகின்றன. இங்கு கடந்த 3 வாரத்தில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரத்து 803 மொத்த வருமானமாகக் கிடைத்துள்ளது என இன்ட்கோ சர்வ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இதையடுத்து, இவ்வாண்டுக்கான 49 -வது ஏலத்தில், இலைரகம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 928 கிலோ, டஸ்ட்ரகம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 017 கிலோ என மொத்தமாக 3 லட்சத்து 20 ஆயிரத்து 945 கிலோ வந்திறங்கியது. இந்த இரண்டு ரகங்களும் 100% விறுவிறுப்பாக விற்றுத் தீர்ந்தது. கடந்தவாரத்தில் ரூ.94.29 சராசரி விலை கிடைத்த நிலையில், இவ்வாரம் ரூ.92.22 கிடைத்தது.



இதற்கிடையில், கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து ஏற்பட்ட விலையேற்றத்தால் ரூ.14 வரை விலை அதிகரித்தது. கொட்டக்கம்பைத் தேயிலை நிறுவனத்தின் தேயிலைக்கு அதிகபட்சமாக, ரூ.114 விலை வைத்து விற்கப்பட்டது. டீ சர்வீஸ் இந்தியா லிமிடெட் தேயிலைக்கு, ரூ.104 வரை விலை வைக்கப்பட்டது.

மேலும், கடந்த 3 வாரங்களில், மொத்தவருமானத்தில் ரூ1 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரத்து 803 அதிகரித்துக் கிடைத்துள்ளதாக இன்ட்கோசர்வ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...