கோவை : சூலூரை சேர்ந்த தம்பதியினர் 4 -வதாக பிறந்த ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், ஜெயலட்சுமி தம்பதியினர். ஏற்கனவே, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 6 -ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் 4 -வதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9 -ம் தேதி அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், ஜெயலட்சுமியின் கணவர் வெங்கடேசன், கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த சுமதி மற்றும் முத்துகுமார் தம்பதிக்கு ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றதாகத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், பிறந்த குழந்தை விற்பது தொடர்பான தகவலை சைல்டு லைன் அதிகாரிகளை அடைந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக சுமதி மற்றும் முத்துகுமார் தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டனர். மேலும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையிடம் சைல்டு லைன் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
மேலும், நாளைக் குழந்தையை உக்கடத்தில் உள்ள டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்க இருப்பதாக சைல்டு லைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, குழந்தையை விற்க முயன்றது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.