திருப்பூர் : அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி பி.எஸ்.என்.எல். ஓப்பந்த ஊழியர்கள், திருப்பூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தின் முன்பு கண்ணில் கருப்புத் துணி கட்டி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த உழியர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கக்கிளை தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அதேபோல, பல்லடத்திலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.