திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 52-வது வார்டு பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் இன்று நாற்றுநடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் 52-வது வார்டு பலவஞ்சிபாளையம் பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு தொழில்கள் அதிகமாக நடைபெற்று வருகிற பகுதியாகும். அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தார் சாலை வசதி மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை ஏதும் மாநகராட்சி சார்பில் இதுவரையில் ஏற்படுத்தித் தராமல் இருந்து வருகிறது. இதனால், சாக்கடை நீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் பலர் அந்த சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த மாற்றமும் ஏற்படாததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் 50 பேர் திரண்டு சாக்கடை நீர் தேங்கி நிற்கும் சாலையில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.