திருப்பூர் : பல்லடம் அருகே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய போது விவசாய கிணற்றில் விழுந்த 2 பேரின் சடலங்களை இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த ஞாயிறன்று இரவு சுமார் 11 மணியளவில் சொகுசு கார் ஒன்று கோவையிலிருந்து மதுரை நோக்கிச் சென்றுள்ளது. பல்லடம் அருகே ஜி.டி.என். தனியார் தொழிற்சாலையை சொகுசு கார் கடந்த போது, எதிரில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும், காரிலிருந்த இரண்டு வாலிபர்கள் அரசுப் பேருந்தின் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பயணிகளுடன் சென்ற பேருந்தை ஓட்டிச் சென்று பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம், சொகுசு காரிலிருந்த இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓட்டம் பிடித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் இரண்டு ஆண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையின் உதவியுடன் விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த இரண்டு உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், மதுரை பரவையைச் சேர்ந்த ராஜேஷ்வரன் (38), சமயநல்லூரைச் சேர்ந்த சரவணக்குமார் (37) ஆகிய இருவரும் கடந்த ஞாயிறன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய போது, விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.