கோவை : அன்னூர் முத்துகவுண்டன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் இலவச மிதிவண்டிகளை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்.
கோவை : அன்னூர் முத்துகவுண்டன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் இலவச மிதிவண்டிகளை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார்.

கோவை மாவட்டம் அன்னூர் முத்துகவுண்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், ஆனையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துக்கவுண்டன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 546 விலையில்லா மடிக்கணினிகளையும், 870 விலையில்லா மிதிவண்டியையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது :- ஒரு மாணவன் தனது படிப்பை தொடங்க பள்ளிக்கு வந்தால் போதும், காலணி முதல் கணினி வரையிலான 14வகை உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. மேலும், இடைநிற்றலை தவிர்க்க கல்வி ஊக்கத்தொகை, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ. மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகை என தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்கள் யாரும் கல்வி கற்க பணம் என்றும் தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கிலே திட்டங்களை தந்தவர் மாண்புமிகு அம்மா. அவரது வழியிலே செயல்படும் தமிழகம் அரசும் கல்வி வளர்ச்சித்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகின்றது, இவ்வாறு கூறினார்.

இவ்விழாவில், கோவை வடக்கு சார் ஆட்சியர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர் பேசியதாவது :- இந்தப் பகுதி விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கனவுத்திட்டமான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை ரூ. 1,500 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அரசு அறிவித்த திட்டங்களை விரைந்து முடிக்க முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.