பாரதியார் பல்கலை.,யில் தொலைதூரக் கல்வி விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தல்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி விவகாரத்தில் நிலவி வரும் பிரச்சனைக்கு ஆளுநர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி விவகாரத்தில் நிலவி வரும் பிரச்சனைக்கு ஆளுநர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் என். பசுபதி கூறியதாவது :- பாரதியார் பல்கலைக்கழக சங்கமும், பல்கலைக்கழக மானிய ஆணையமும் இணைந்து தொலைதூரக் கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வந்தது. ஆனால், அதனை முறையாக கடைபிடிக்காமல், தொலைதூரக் கல்வி மையம் தொடங்குவது குறித்து பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் குழு தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி, 2018-2019 கல்வியாண்டுக்கான தொலைதூரக் கல்வியில் மையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் குழுவின் தீர்மானத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்காத நிலையில், அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகவே தொலைதூரக் கல்வி மையம் தொடங்கப்பட்டு வருவதாகப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் என். பசுபதி தெரிவித்துள்ளார். மேலும், சிண்டிகேட் குழுவின் தலைவராக சுனில் பாலிவால் இருந்த போது, தொலைதூரக் கல்வி மையங்களுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது இலாப நோக்கத்திற்காக பாரதியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். 

எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், செனட் குழுவைச் சேர்ந்த 360 உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, தொலைதூரக் கல்விக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...