பா.ஜ.க. செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை : பா.ஜ.க. செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை : பா.ஜ.க. செல்வாக்கு இழந்ததை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை இழந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். மற்றும் மிசோரமில் எம்.என்.எப் கட்சிகள் ஆட்சியமைக்க உள்ளன.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது. இது பா.ஜ.க.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை," என்று அவர் பதிலளித்தார்.

சமீபத்தில் பா.ஜ.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, “10 பேர் சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் யார் பலசாலி..?” என்று பதிலளித்தார். மேலும், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையாக முயற்சிப்பதாகக் கருத்து கூறியிருந்தார்.

தமிழக அரசியலில் விரைவில் புதிய கட்சியை தொடங்கவிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருடைய தற்போதைய பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...