கோவை : நொய்யல் நதியை சீரழித்து வரும் சட்டவிரோத சாயப்பட்டறைகள் மீது கோவை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகரின் பிரதான நீர் ஆதாரமான நொய்யல் நதி, ஆக்கிரமிப்புகளால் ஆங்காங்கே சிதைந்தும், குப்பைக் கழிவுகளால் கலங்கியும் சாக்கடையாய் மாற்றப்பட்டு நகரின் குளங்களைத் தொடுகிறது. குறிப்பாக, உக்கடம் பெரியகுளத்திற்கு நீர் கொண்டு வரும் ராஜவாய்க்காலை கட்டிடக் கழிவுகளும், பிளாஸ்டிக் குப்பைகளும் நிரப்பியுள்ளது. இதனால், மழைக் காலங்களில் வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள் கான்க்ரீட் அடைப்பு போல் உருவாகி, ஆற்றுநீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது.

இவற்றோடு, சாக்கடை கழிவுநீரை நச்சு கலந்த நீராக மாற்றி, குளத்தில் வசிக்கும் உயிர்களை கொன்றுகுவிக்க, வாய்க்காலின் கரையை ஒட்டி பல்வேறு சாயப்பட்டறைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள வாய்க்கால் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாயப்பட்டறையால், அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் உருவாகும் விதத்தில் நச்சு அமிலங்கள் நிறைந்த சாய நீர் அப்பகுதியில் தேங்கியுள்ளது. மேலும், அருகில் உள்ள விவசாய நிலத்தின் கிணற்றில் இருந்து சாயப்பட்டறைக்கு நீர் எடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், "வாய்க்கால் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சாயப்பட்டறைகளை உடனடியாக அகற்ற வேண்டும்," என கோரிக்கை விடுத்தனர்.
உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதோடு, சுற்றுச்சூழலை சிதைத்து வரும் சாயப்பட்டறையை தடைசெய்து, உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சி அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்பதே இயற்கையையும், நொய்யல் நதியையும் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.