கோத்தகிரியில் தொலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தில் தொலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தில் தொலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேர்பெட்டா கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஊர் மையப் பகுதியில் தனியார் தொலைபேசி கோபுரம் அமைப்பதற்கு கிராம மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். இதனால், கோத்தகிரி வட்டாட்சியர் இதற்கான பணிகளை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டனர்.



இதனால், ஊர் பொதுமக்கள் வேலைகளை தடுத்து நிறுத்தக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், வட்டாட்சியரிடம் தங்கள் குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க முற்பட்டனர். இதையடுத்து, தொலைபேசி கோபுரம் அமைப்பதற்காகக் கொண்டு வந்த பொருட்களை தனியார் தொலைபேசி நிறுவனம் திரும்ப எடுத்துக்கொண்டு சென்றனர். தொடர்ந்து, தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டால் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். 



இந்த நிலையில், தனியார் செல்போன் நிறுவனத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி இப்பகுதி கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...