தெலுங்கானா : தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, முதலமைச்சராக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பா.ஜ.க. ஆகிய 3 அணிகளுக்கிடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. இதில், சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 84 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கூட்டணி 24 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் டி.ஆர்.எஸ். வெற்றியை நெருங்குகிறது. எனவே கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.