கோவை : கோவையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆறு செல்ப் டிரைவிங் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொந்த கார்கள் எந்த ஒரு வரியும் கட்டப்படாமல், வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் முறையாக வரி கட்டி வியாபார நோக்கத்திற்காக டி போர்டு கார்களை இயக்கும் ஒட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் இணை செயலாளர் பாலாஜி கூறுகையில், "கல்லூரி மாணவர்களை சிலர் அக்டிங் ஓட்டுநர்களாக தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களது படிப்பு கெடுகின்றது.
அதே போல் சொந்த வாகனங்களை சிலர் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்," என்றார்.