5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை

தற்போது 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படுவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடியவுள்ளது.

தற்போது 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படுவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடியவுள்ளது. 

தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் வரை இருக்க வேண்டிய சூழலில், அதற்கு முன்பாகவே சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. இதையடுத்து, 5 மாநிலங்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிப் பரபர தகவல்களுடன் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

அதில், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் கடும் போட்டிகள் நிலவியது. இந்தத் தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் 92 இடங்களையும், பாஜக 82 இடங்களையும் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் கடும் போட்டிக்கு நடுவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் பாஜக 111 இடங்களைப் பிடித்து காங்கிரசைப் (107 இடங்கள்) பின்னுக்குத் தள்ளியது. 

இதற்கிடையில், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் , 88 இடங்களைப் பிடித்து டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலையிலும் அதற்கு அடுத்த நிலையில் 21 இடங்களை காங்கிரசும், குறைந்த பட்சமாக இரண்டு இடங்களை பாஜகவும் பிடித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் முதல் 57 இடங்களை காங்கிரசும், அடுத்து 24 இடங்களைப் பிடித்து பாஜக அதற்கடுத்த நிலையிலும் உள்ளது.

இதைப்போலவே, மிசோரமில் 40 தொகுதிகளில் மி.தே.மு (மிசோரம் தேசிய முன்னணி) 27 இடங்களைப் பிடித்து காங்கிரஸ், பாஜக கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...