தனியார் கல்குவாரியில் பணியின் போது கால்களை இழந்தவருக்கு உரிய இழப்பீடு கோரி மனு

திருப்பூர் : திருப்பூரில் தனியார் கல்குவாரியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்த போது கால்களைப் பறிகொடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு உரிய இழப்பீடு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் கல்குவாரியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்த போது கால்களைப் பறிகொடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு உரிய இழப்பீடு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 

ஆண்டிபுதூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரி, வங்கிக் கடனுக்காக ஜப்தி செய்யப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. பூட்டிய கல்குவாரிக்கு பாதுகாவலராக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அவருடன் பணிபுரிந்து வந்த ராமசாமி என்பவர் கவனக்குறைவாக தண்ணீர் மோட்டாரை இயக்கியதால், சுப்பனின் வேஷ்டி மோட்டாரில் சிக்கி அவரது கால் பறிபோனது. இதில், சுப்பனின் இடது கால் முழங்காலுக்கு கீழ் துண்டாகிவிட்டது.



இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பனுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், சரியான பாதுகாப்பு செய்து கொடுக்காத கல்குவாரியின் உரிமையாளர்கள் மீதும், கல்குவாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளரையும் வழக்கில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...