ரூ. 9 ஆயிரம் கோடி வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு, அதனை திருப்பி செலுத்தாத மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், தொழிலதிபரும், கிங் பிஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவர் மீது இந்திய நீதிமன்றங்களில், சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குநரகமும் வழக்குகள் போட்டுள்ளன. இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தனர். அதில், விஜய் மல்லையாவை அவரை நாடு கடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உண்டு. ஆனால், நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு, அதை விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யவில்லை என்றால், அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் உத்தரவிடுவார். அவர் உத்தரவிட்ட 28 நாளில் அவர் நாடு கடத்தப்பட்டு விடுவார். விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டு விட்டால் அவரை அடைப்பதற்கு மும்பை ஆர்தர் ரோடு சிறை தயாராக உள்ளது. அந்தச் சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.