கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

வரும் பிப்ரவரி மாதம் அகமதாபாத், கவுகாத்தி, மங்களூரூ, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 10,000 பேர், இன்று முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதேபோல, வரும் 28-ம் தேதி மாபெரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில், விமானங்களை இயக்குதல், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடு, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று முதல் 2 நாட்கள் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பல்ராஜ்சிங் ஹாலவாட் கூறியதாவது :- சர்வதேச விமான நிலையங்கள் முழுவதும் தனியார்மயமாக்குதல் காரணமாக இந்திய விமானநிலைய அதிகாரச்சபையும், அதன் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வரி செலுத்துபவர்களின் பணம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அதேவேளையில், இந்திய விமானநிலைய அதிகாரச்சபை ஒரு இலாபம் ஈட்டும் அமைப்பாகும். இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ம் தேதி மாபெரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதேவேளையில், இன்று முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.