நீலகிரி : கூடலூர் அருகே உள்ள மசினகுடி - தெப்பக்காடு சாலையில் விலை உயர்ந்த தேக்கு மரம் விழுந்ததால் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று மற்றும் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், மசினகுடி முதல் தெப்பக்காடு செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த தேக்கு மரம் பலத்த காற்றின் காரணமாக சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக, அந்த வழியான சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், தெப்பக்காடு வழியாக மைசூர் செல்பவர்களும் மற்றும் முதுமலை செல்லக்கூடியவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சாலையில் விழுந்த தேக்கு மரத்தை அகற்றிப் போக்குவரத்தை சீர்செய்தனர். இதன் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.