உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையின் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரிசெய்ய வலியுறுத்தல்

கோவை : உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையின் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரி செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் அமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை : உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையின் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரி செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் அமைப்பினர் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- உக்கடம் கழிவுநீர் பண்ணையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படும் தண்ணீர் முறையாக குழாய் அமைக்கப்படாமல் கொண்டு செல்லபடுவதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, இதற்கு தீர்வு காண வேண்டும், இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.



இதேபோல, அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், 74 மற்றும் 75 வது வார்டுகளுக்கு உட்பட்ட ஜி.எம்.நகர், அன்பு நகர், காந்தி நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பெரும்பாலானோர் இந்தப் பகுதி வழியாக செல்வதாலும், சாலைகள் சரி இல்லாத காரணத்தாலும், விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...