கோவை : தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரன் என்ற விவசாயியை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக கொண்டையம்பாளையம் கிராமத்தில் உள்ள நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக விவசாயி கூறி வந்தார்.

இந்த நிலையில், தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டுத் தரக் கோரி தனி ஒருவனாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதையறிந்த போலீசார், எழுந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், விவசாயி ராஜேந்திரனை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்தனர். இதனால், சிறிதுநேரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.