கோவை : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதியில் சனிக்கிழமையன்று விவசாயிகள் சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் வ.து.பாலசுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கஜா புயலில் உயிரிழந்த விவசாயிகளுக்கும், பாரம்பரிய நெல்விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், காவிரி மற்றும் சிறுவாணி ஆற்று நீரைத் தடுக்கும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் நடவடிக்கைகளை தடுப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலகர்களின் வேலைநிறுத்தத்தை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும், மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய சந்தை மதிப்பை இழப்பீடாக வழங்கவேண்டும், விவசாயிகளுக்கான அதிகபட்ச வங்கி கடன் உயர்த்தப்பட வேண்டும், வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுத்தொகையும் வழங்கிட வேண்டும் மற்றும் மத்திய அரசின் 'எக்கனாமிக் கோரிடோர்' திட்டத்தை கோவை வர நீட்டித்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.