கோவை : போத்தனூர் அருகே விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போத்தனூர் காவல்நிலையம் பின்புறம் உள்ள சத்தியநாராயணா நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு 64 சென்ட் இடம் உள்ளது. அங்கு விளையாட்டு திடல் அமைக்கப்பட இருந்ததாகவும், தற்போது அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை ரத்து செய்ய செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது :- 3 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் இவ்விடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் சைட்டில் விளையாட்டு திடல் மட்டுமே அமைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை மாற்றி, வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே நொய்யல் நீர்வழி பாதை உள்ளதால், தண்ணீர் மாசுபடும் வாய்ப்பு இருக்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முற்பட்டால் தங்களது ரேசன் அட்டைகளை ஒப்படைப்போம், இவ்வாறு கூறினர்.