பன்றிகாய்ச்சல் விளம்பரத்தினால் வியாபாரம் பாதிப்பு : பன்றி இறைச்சிகடை வியாபாரிகள் மனு

கோவை: பன்றிகாய்ச்சல் என விளம்பரப்படுத்துவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக் கூறி பன்றி இறைச்சிகடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: பன்றிகாய்ச்சல் என விளம்பரப்படுத்துவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக் கூறி பன்றி இறைச்சிகடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மாவட்ட பன்றி வளர்ப்போர் மற்றும் இறைச்சிகடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு சார்ப்பில் H1N1 பன்றிகாய்ச்சல் என விளம்பரப்படுத்துவதால் மக்கள் பீதியடைந்து வென்பன்றி இறைச்சி சாப்பிட தயங்குகிறார்கள். மேலும், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் இதே தகவல் வருவதால் வென்பன்றி இறைச்சி விற்பனை வெகுவாக குறைந்து விட்டதாக தெரிவித்தனர்.

எனவே, அதனை இனிமேல் H1N1 என்றே அழைக்க வேண்டும் எனக் கூறி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், "தமிழகத்தில் 2000 பன்றிவளர்ப்பு பண்ணைகள் உள்ளது.பன்றி வளர்ச்சி மற்றும் இறைச்சி விற்பனையை நம்பி 3 லட்சம் பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் சுமார் 100 பண்ணைகள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. 



அனைத்துப் பண்ணைகளிலும் பன்றிகள் முறையாக பராமரிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வளர்க்கப்படுகின்றன. அதன் பின்னர் தான் அவை இறைச்சிகளாக விற்ப்படுகின்றன. எனவே, பன்றிகாய்ச்சல் என்ற வார்த்தையைத் தவிர்த்து H1N1 என்று அழைக்க வேண்டும்," என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...