கோவை : கேரள முதலமைச்சரை தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசும் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. குறைந்த வயதுடைய பெண்கள் சபரிமலை செல்வதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கி அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், குறைவான வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றதைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இந்து அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே, வரும் 16-ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு கேரள முதலமைச்சர் வருகை தர இருக்கிறார்.
இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில் இந்து மக்களை வஞ்சித்து வரும் கேரள முதலமைச்சரை தமிழகத்தின் எல்லைக்குள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.