நீலகிரி : அரசியல் தலையீடு காரணமாக குன்னூர் நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து துப்புறவுத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையராக சரஸ்வதி பொறுப்பேற்றார். நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கடைகளை உள்வாடகைக்கு விட்ட நபர்களை வெளியேற்றி, நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். நகராட்சி வருமானத்தைப் பெருக்கும் வகையில், நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில், உள்வாடகை கடைகளை மீட்டெடுக்கவும் அதிரடி முயற்சிகள் மேற்கொண்டார்.
மேலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் கட்டிய விதிமீறி கட்டிய அபார்ட்மென்ட்' கட்டிடத்திற்கு கடந்த 6-ம் தேதி அதிரடியாக 'சீல்' வைத்தார். இந்த நிலையில், சென்னை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக இணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள உத்தரவில், 'குன்னூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, வேலுர் மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்,' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குன்னூர் நகராட்சி ஆணையரின் இந்த திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 12-ம் தேதி குன்னூர் வி.பி. தெருவில் அனைத்துஅமைப்புகளையும் ஒன்றிணைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், நகராட்சியைச் சேர்ந்த 175 துப்புறவு தொழிலாளர்கள், பணிக்கு செல்லாமல் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.