மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான நல்வாழ்வு முகாம் பணிகள் தீவிரம் : சோலார் மின்வேலி அமைக்கும் பணி மும்முரம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான நல்வாழ்வு முகாம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முகாமை சுற்றி சோலார் மின்வேலி மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான நல்வாழ்வு முகாம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முகாமை சுற்றி சோலார் மின்வேலி மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோரப் பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இங்கு நடைபெற்ற 48 நாள் முகாமில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்பட்டு வரும் 33 யானைகள் பங்கேற்றன. 

கடந்த ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், 6-ம் ஆண்டாக இவ்வாண்டும் இங்கேயே யானைகள் முகாம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக, முகாம் நடைபெறும் பவானியாற்று கரையோரப்பகுதி பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு சீரமைக்கப்பட்டுவிட்டது. முகாமில் உள்ள யானைகள் காலை, மாலை என இருநேரங்களில் நடைபயிற்சிக்கு கொண்டு செல்லப்படும் என்பதால், இதற்கான பகுதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், யானைகள் தினசரி ஷவர் பாத் மூலம் குளிக்க வைக்க தரைதளம் மற்றும் ஷவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 



முகாமில் பங்கேற்கும் யானைகள் மற்றும் அதன் பாகன்களுக்கான உணவு தயாரிப்பு மற்றும் தங்குமிடங்கள், மின்விளக்குகள் அமைக்கும் பணி, முகாமை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், முகாம் நடைபெறவுள்ள பகுதி வனத்தை ஒட்டியுள்ள இடம் என்பதால், முகாமில் உள்ள கோவில் யானைகளைக் காட்டு யானைகள் ஊடுருவி தாக்கிவிடக் கூடாது என்பதற்காக முகாமை சுற்றி சுமார் 4.5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சோலார் மின்வேலிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...