கோவையில் திருட்டு நகையைக் கொடுக்க மறுப்பு : சி.சி.டி.வி காட்சிகளால் நகை கடை அதிபர் கைது

கோவை : கோவை, குனியமுத்தூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்துத் திருடப்பட்ட திருட்டு நகையைக் கொள்ளையனிடமிருந்து வாங்கிவிட்டு, கொடுக்க மறுத்த தொழிலதிபரை காவல்துறை கைது செய்தனர்.

கோவை : கோவை, குனியமுத்தூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்துத் திருடப்பட்ட திருட்டு நகையைக் கொள்ளையனிடமிருந்து வாங்கிவிட்டு, கொடுக்க மறுத்த தொழிலதிபரை காவல்துறை கைது செய்தனர்.

வேலூரருகே உள்ள காட்பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (41). இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து, வீட்டிலிருந்த 30 பவுன் நகையை திருடிச் சென்றார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வந்தனர். அவர் மீது தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் 100 -க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில், ஒரு வழக்கிலிருந்து சிறையை விட்டு வெளியே வந்த மணிகண்டன் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்றார். தகவலறிந்து போலீசார் கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அவரை மடக்கிப்பிடித்து மீண்டும் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை குனியமுத்தூர் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன. 

அதில் அவர் குனியமுத்தூர் பகுதியில் கொள்ளையடித்த 30 பவுன் நகையில், வேலூர் தொழிலதிபரான அசோக்குமார் (32), நடத்திவரும் நகைகடையில் 14 1/2 பவுன் நகையை விற்றதாகத் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் அவரை நேரடியாக அழைத்துச் சென்றபோது அந்த நகை கடையை அடையாளம் காட்டினார். அந்த நகைக் கடைக்குள் சென்ற போலீசார், அசோக்குமாரிடம் விசாரணை நடத்தி, மணிகண்டன் விற்பனை செய்த 14 1/2 பவுன் திருட்டு நகை திருப்பி கொடுக்கும்படி கேட்டனர். 

அதற்கு அசோக்குமார், மணிகண்டன் இங்கு நகையை விற்பனை செய்யவில்லை எனக் கூறி நகையை திருப்பித் தர மறுத்துள்ளார். மறுகணமே, போலீசார் அந்தக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அந்த சி.சி.டி.வி காட்சிகளில் மணிகண்டன் நகை விற்பது தெளிவாக பதிவாகியிருந்தது.

இதையடுத்து, திருட்டு நகைகளை வாங்கிவிட்டு மறுத்த அசோக்குமாரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...