கோவை : கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நந்தினி. கோவை டவுன்ஹாலில் உள்ள கல்வியியல் கல்லூரியில் 2 -ம் ஆண்டு எம்.எட் படித்து வருகின்றார். இவர் நேற்று விடுதியிலிருந்து சுமார் 2 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் புறப்பட்டு வந்துள்ளார். பின் காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்திற்கு சென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் மேலிருந்து குதித்துள்ளார்.

இந்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக இளம் பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விசாரித்ததில் அவருடைய ஜாதகத்தில் குறைபாடு இருப்பதாக ஜோசியர்கள் கூறியுள்ளதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காட்டூர் போலீசார் இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.