திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி உழைப்பு தானம் செய்த இளைஞர்கள்

திருப்பூர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உழைப்பு தானம் மேற்கொண்டனர்.

திருப்பூர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உழைப்பு தானம் மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து அத்தியாவசமான மருத்துவ சேவைகளுக்கு கோவை வர வேண்டியுள்ளது. இதனால் திருப்பூர் வாசிகள், திருப்பூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கக் கோரி டிசம்பர் 11- ம் தேதி பாரதியார் பிறந்தநாளன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உழைப்பு தானம் மேற்கொள்வது என திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில் அவிநாசி சாலைப் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உழைப்பு தானத்தில் ஈடுபட்டனர். இதில் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்திலுள்ள குப்பைகள், மற்றும் புட்கள், ஆகியவற்றைச் சுத்தம் செய்து மருத்துவமனையிலுள்ள கழிவறைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தனர்.

இந்தத் தூய்மை பணிகளில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர தலைவர் சம்பத், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு உழைப்பு தானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...