நீலகிரி : உதகையில் நடைபெற்ற 3- வது திரைப்பட விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

உதகையில் கோலாகலமாக நடைபெற்ற 3 -வது திரைப்பட விழாவில் பா. ரஞ்சித் பேசுகையில், "ஆணவ கொலைக்கு எதிராகப் போராடி வரும் கௌசல்யா இன்று மறுமணம் செய்து கொண்டது பாராட்டுக்குரியது. இருவரும் இணைந்து ஆணவ கொலைக்கு எதிராக போராடுவதாக கூறியுள்ளார்கள். அது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

மேலும், பட்டியலினத்தில் உள்ள மக்கள் தலைவர்கள் ஒன்றிணைந்து தனித்து நிற்பதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "திருமாவளவன் என்னுடைய நல்ல நண்பர். அவர் கூறிய கருத்தை நான் முழுமையாகப் பார்க்கவில்லை, பார்த்தபின் கருத்து கூறுகிறேன்," என பதிலளித்தார்.