திருப்பூர் : திருப்பூரில் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் மறைந்த நெல் ஜெயராமனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விழா நேற்று நடைபெற்றது.

பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனுக்கு குமரன் சாலையிலுள்ள திருப்பூர் அரிமா சங்கத்தில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டு மைய சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அதன் தலைவர் யோகி செந்தில் தலைமை வகித்தார்.
சூழலியலாளர் கோவை சதாசிவம், மரபு நெல் காக்க வேண்டிய அவசியத்தையும் , இயற்கை விவசாயத்தின் தேவையையும் குறித்து சிறப்புரை ஆற்றினார். இயற்கை விவசாயி அரச்சலூர் செல்வம், நெல் ஜெயராமனால் பெருக்கப்பட்ட பராம்பரிய நெல்கள், நம்மாழ்வாரோடு ஜெயராமன் மரபு நெல் பாதுகாக்க எடுத்த முயல்வுகளையும் குறித்து விளக்கினார்.
மேலும், இந்நிகழ்வினில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தினர்.