கோவை : கோவை : கோவையில் பாஜக பிரமுகரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கிய சம்பவத்திற்கு தகாத உறவினால் ஏற்பட்ட முன்விரோதமே காரணம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை : கோவை : கோவையில் பாஜக பிரமுகரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கிய சம்பவத்திற்கு தகாத உறவினால் ஏற்பட்ட முன்விரோதமே காரணம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை, சோமயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் வேலாண்டிபாளையம் மண்டல தலைவராக பதவி வகித்து வருகிறார். வடவள்ளி அடுத்த கல்வீரம்பாளையம் பிரிவு பகுதியில் பிளாஸ்டிக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருடைய கடை அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளரான சங்கீதா என்பவருக்கும் உதயகுமாருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக தகாத உறவு இருந்திருக்கிறது.
இதனிடையே, கடந்த ஆறு மாத காலமாக சங்கீதா வேறு ஒரு நபருடன் நெருங்கிப் பழகுவதை அறிந்த உதயகுமார், அந்த நபருடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு சங்கீதாவிடம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், சங்கீதா அதனை ஏற்காமல், உதயகுமாரை தங்கள் கட்டிடத்திலிருந்து கடையை அப்புறப்படுத்துமாறு கூறி வந்துள்ளார். கடையை காலி செய்யாத உதயகுமார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா நேற்று மாலை வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வெளியே வந்த உதயகுமாரை கடை முன்பாக வைத்து நிறுத்தி உடனடியாக கடையை காலி செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சங்கீதாவிற்கு ஆதரவாகப் பேசியதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதயகுமாரின் இன்னோவா காரை கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி உதயகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் உதயகுமார் படுகாயமடைந்த சூழலில் உதயகுமாருக்கு ஆதரவாக வந்த மேலும் 2 பேரையும் அந்த நபர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் படுகாயமடைந்த உதயகுமாரை கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்தச் சம்பவத்தில் லேசான காயமடைந்த கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் வடவள்ளி பகுதியில் உள்ள மௌத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணையில் தகாத உறவால் ஏற்பட்ட விரோதமே உதயகுமார் தாக்கப்பட்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
தற்போது இவ்வழக்கில், சட்டக்கல்லூரி மாணவன் மகாராமசந்திரன் (19) , சண்ணாசி (21 ), பாலாஜி (22), மகேஷ்வரன்(24), மற்றும் சங்கீதா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர்.