கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவரை இடத்தகராறு காரணமாக கத்தியால் குத்தப்பட்டதில் தற்போது கேஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை : பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவரை இடத்தகராறு காரணமாக கத்தியால் குத்தப்பட்டதில் தற்போது கேஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை வேலாண்டிபாளையம் மண்டல தலைவராக பதவி வகித்து வரும் உதயகுமாருக்கு, வடவள்ளி அடுத்த கல்வீரம்பாளையம் பகுதிகள் பாத்திர கடை உள்ளது.
இன்று மாலை அவர் கடை முன்பாக வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை கத்தி மற்றும் அரிவாளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் கடை வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க பிரமுகர் உதயகுமார் நடத்தி வரும் பாத்திர கடை சங்கீதா மற்றும் சிவக்குமார் தம்பதியரின் இடத்துக்கு சொந்தமானது என்றும் இவர் வாடகைக்கு உள்ளதும் தெரியவந்தது. சரியாக வாடகை கொடுக்காததால் அவரை காலி செய்யும்படி சங்கீதா சொல்லியதாகவும் ஆனால் பிஜேபி பிரமுகர் உதயகுமார் காலி செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சங்கீதா அடியாட்களை வைத்து பா.ஜ.க பிரமுகர் உதயகுமாரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்தப்பட்டதில் பா.ஜ.க பிரமுகர் உதயகுமார் தற்போது கேஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

.