கோவை : வேலை நேரத்தை 8 மணி நேரமாக உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அரசுப் போக்குவரத்து கழக உதவி பொறியாளர்கள் சம்மேளனத்தின் மாநில கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக உதவி பொறியாளர்கள் சம்மேளனத்தின் மாநில கலந்தாய்வு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில், உதவி பொறியாளர்களுக்கு 6-வது ஊதியக் குழுவிலிருந்து 7-வது ஊதியக்குழுவிற்கு ஊதியத்தை மாற்றும் போது முறைப்படுத்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள மற்ற துறைகளில் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை வழங்குவது போல் உதவி பொறியாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும், வேலை நேரத்தை 8 மணி நேரமாக உறுதி செய்ய வேண்டும், பதவி உயர்வு விவகாரம் தொடர்பாக முறைப்படுத்த வேண்டும், இரவு நேரப் பணிக்கான எந்த ஒரு பணபலன்களும் இல்லாத நிலையில், இரவு பணி பார்க்க நிர்ப்பந்திக்கக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். பொருளாளர் விவேக், இனை செயலாளர்கள் ரமேஷ், ராஜ்மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.