கோவை : குமாரசாமி என்ற முத்தண்ணன் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 96-வது வார தொடர் களப்பணி நடைபெற்றது.

கோவை மாநகரின் மத்தியில் உள்ள குமாரசாமி என்ற முத்தண்ணன் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பல வாரங்களாக தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மக்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 96-வது வார தொடர் களப்பணி நடைபெற்றது. தூய்மை செய்த இடத்தை இம்முறை மாட்டுச் சாணத்தால் மொழுகி, பச்சரிசி மாவால் கோலமிட்டு, அலங்கரித்து வைத்துள்ளனர். இந்தக் களப்பணியில் 65க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சுமார் 2 டன் அளவுள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றினர்.