நஞ்சராயன் குளத்தில் புலம் பெயரும் பறவைகளின் எண்ணிக்கை குறைவு : சூழலியலாளர்கள் வேதனை

திருப்பூர் : திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் புலம் பெயரும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக சூழலியலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் புலம் பெயரும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக சூழலியலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 440 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளத்தில் 280 ஏக்கர் பரப்பளவில் நீர் நிறைந்துள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் பறவைகளின் கிரீச் ஒலி கேட்ட வண்ணம் இருந்து வந்தது. இங்கு ஆண்டு முழுவதும் உள்நாட்டு பறவைகளான கூழைக்கிடா, புள்ளிமூக்கு வாத்து, செந்நீல நாரை, சங்குவளை நாரை என உள் நாட்டு பறவைகள் ஆண்டு முழுவதும் இந்த குளத்தில் தங்கியுள்ளன. 



குளிர்காலம் தொடங்கியதும் அக்டோபர் மாதம் முதலே வடமேற்கு ஐரோப்பா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து பட்டை தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, கிலுவை, பட்டாணி உப்பு கொத்தி, பேதை உள்ளான் போன்ற பறவை இனங்கள் இந்த நஞ்சராயன் குளத்தில் வந்து தங்கி செல்லும், குறிப்பாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள 350 கிலோ மீட்டர் தொலைவிற்கு வேறு எங்கும் காணமுடியாத பறவை இனங்களையும், இங்கு காணக்கூடிய நிலையில், சிறந்த பறவைகள் சரணாலயமாக விளங்கி வந்துள்ளது. 



இந்த நிலையில், இக்குளத்தில் இருந்து வண்டல்மண் அள்ளப்பட்ட பின் குளத்தில் இருந்த மண் திட்டுக்கள் தற்போது ஆழமான பகுதியாக மாறியுள்ளதால் பறவையினங்கள் இரைதேட மண் பரப்பின்றி தவித்து வருகின்றன. மேலும், புதர் பகுதிகள் அகற்றப்பட்டதால் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு பறவைகள் வரத்து பெருமளவு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்த நிலையில், இந்த ஆண்டு 3,000-க்கும் குறைவான பறவைகளே தற்போது வரை வந்துள்ளன. 



ஆழம் குறைவான மண்பரப்பில் நின்றவாறே பறவைகள் இரைதேடும் நிலையில், குளக்கரைகளில் ஆகாய தாமரைகள் சூழ்ந்துள்ளன. தற்போதுள்ள குளத்தை சுற்றியுள்ள ஆகாய தாமரைகளை அகற்றினால்கூட, பறவைகள் இரை தேட உகந்ததாக அமையும் என சூழலியலாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். மேலும், பறவைகளின் வரத்து குறைவு என்பது 4 ஆண்டுகள் கழித்தே உறுதி செய்ய முடியும் என்பதால், அடுத்த ஆண்டு பறவைகளுக்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி தருவதே பறவைகளின் வரவை தக்கவைக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...