கேரளா : கேரள மாநிலம் கன்னூர் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய 2-வது பசுமை விமான நிலையமாக கன்னூர் விமான நிலையம் உருவாகியுள்ளது. இன்று இந்த விமான நிலையத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். ரூ.1,892 கோடி மதிப்பீட்டில் 2,000 ஏக்கர் பரப்பளவில் கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ள 4-வது சர்வதேச விமான நிலையமான கன்னூர் விமான நிலையம் திகழ்கிறது.
இந்த விமான நிலையத்தில் தற்சமயம் 3,050 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது, விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த அடுத்த 18 மாதங்களில் ஓடுதளத்தின் நீளம் 3,400 மீட்டர்களாகவும், அடுத்தகட்டமாக 4,000 மீட்டர் கொண்டதாகவும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டிலேயே 4-வது மிகப்பெரிய விமான நிலையமான இது உருமாறும். இங்கு, 24 செக்-இன் கவுண்டர்கள், செல்ஃப்-பேக்கேஜ் டிராப் கவுண்டர்கள், சுயபரிசோதனை இயந்திரங்கள் மற்றும் 32 குடியேறுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போயிங் -777 போன்ற மிகப்பெரிய விமானங்கள் மற்றும் 20 சாதாரண விமானங்கள் ஒரே சமயத்தில் நிறுத்துமளவிற்கான வசதி கொண்டுள்ளது.

கன்னூர் விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் 180 பயணிகளுடன் கூடிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சிறப்பு விருந்தினர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.