நீலகிரி : குன்னூர் அருகே இருக்கும் கோத்தகிரி அளக்கரை தேயிலை தோட்டத்தில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பீதியடைதுள்ளனர்.

கோத்தகிரி அளக்கரையில் புதூர், காமராஜர் நகர் மற்றும் சேலாடா உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், வனமும், அதனையொட்டி தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, காமராஜர் நகர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள ஓரு பாறைக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை, அடிக்கடி சாலையை கடந்து செல்வதும், அங்குள்ள மரங்களில் ஏறி அமர்ந்து கொள்வதையும் காணும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், தோட்டப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தொய்வும் ஏற்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்பு பகுதிகளிடையே தொடர்ந்து சுற்றித் திரியும் இந்த சிறுத்தை, ஐந்துக்கும் மேற்பட்ட ஆடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொன்றுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "வனத்துறையினர் இப்பகுதியில் உலா வரும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறுத்தை நடமாட்டத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.