1.5 லட்சம் ஊழியர்களுக்கு ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பயிற்சி அளிக்கத் திட்டம்

கோவை : 2019-20 ஆம் ஆண்டில் ஜவுளித்துறையில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்க ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கோவை : 2019-20 ஆம் ஆண்டில் ஜவுளித்துறையில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்க ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் டி. ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இந்தப் பயிற்சியின் மூலம் கைத்தறி, விசைத்தறி, ஸ்பின்னிங், பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவர். இந்தத் திட்டம் வரும் ஜனவரி மாத இறுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 

கடந்த சனிக்கிழமை சைமா மற்றும் ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் கைத்தறி, விசைத்தறி மற்றும் சிறிய, நடுத்தர ஜவுளி நிறுவனங்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதன் துறைகளில் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த ஆணையத்தால், கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.2 லட்சம் ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் பல விதிமுறைகளை தளர்த்திய மத்திய அரசு, மாநில அரசு மூலம் பயிற்சி பெறுவோருக்கு நிதியுதவி அளிக்கிறது. அதாவது, பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 3,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டில் கைத்தறி பிரிவில் 20,000 முதல் 25,000 பேருக்கும், ஸ்பின்னிங்கில் 25,000 பேருக்கும், விசைத்தறியில் 50,000 பேருக்கும், பின்னலாடையில் 15,000 பேருக்கும், 5,000 முதல் 10,000 பேர் ப்ராஸசிங் யூனிட்டிலும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது, எனக் கூறினார். 

ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.வி. ராவ் கூறுகையில்," கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. அவர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையம் நெசவாளர்களுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ்களை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், டிஜிட்டல் முறை, மொபைல் பேங்கிங், இ- வர்த்தகத்தின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து பயற்சி அளிக்கப்படுகிறது," என்றார். 

மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளித்துறை திறன் மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் பிரத்யேக வேலை வாய்ப்பு முகாமில், தமிழகத்தின் ஜவுளி நிறுவனங்களின் பங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...