நீலகிரியில் குளுகுளு காலநிலையை அனுபவிக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க, இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க, இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். 



நீலகிரி மாவட்டத்தில் தற்போது சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளா, கர்நாடக மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வர தொடங்கி உள்ளனர். 

குறிப்பாக, உதகையில் உள்ள தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக தட்பவெப்பநிலையும் நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல்நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இதனால், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கு பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...