கோவை : 74-வது அனைத்து இந்திய ஜவுளித்துறைக்கான மாநாடு கோவையில் வரும் 15-ம் தேதி முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தென்னிந்திய ஜவுளித்துறை கூட்டமைப்பினால் 'சர்வதேச ஜவுளித்துறை - முன்னேற்றத்திற்கான வழி' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த மாநாடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், லட்சுமி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட், ரைட்டர், ட்ரூட்ஸ்லர், சௌரர் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைசிறந்த பேச்சாளர்களும் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 பேச்சாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதேபோல, வியட்நாம், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.
இது தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராமலிங்கம் கூறுகையில், "ஜவுளித்துறையில் இருக்கும் போட்டி மற்றும் தகுதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மேலும், ஜவுளித்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துதல், நூலில் இருந்து ஆடை வடிவமைப்பது போன்ற பணிகளில் திறமை வாய்ந்த நபர்களை பணியமர்த்துவது போன்றவை குறித்து விளக்கப்படுகிறது. உண்மையில், ஜவுளித்துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்த மாநாட்டின் மூலம் ஜவுளித்தொழில் துறையில் இருக்கும் நமது நாட்டின் உயர் தொழில்நுட்பம் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், இந்திய தொழில்நுட்பங்களை கொண்டாடும் விதமாகவும், தயாரிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்யும் இந்த மாநாடு வழிவகை செய்யும்," என்றார்.