உடுமலையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்

கோவை : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது.


கோவை : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் - கெளசல்யா கடந்த 2015-ம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி ஓராண்டு இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில், கெளசல்யாவின் பெற்றோர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னர், சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவி சாதி, ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களிலும் செயற்பாட்டாளராகவும் கெளசல்யா இருந்து வருகிறார் 

இந்நிலையில், நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடன் கெளசல்யா இன்று திருமணம் செய்து கொண்டார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அனைவரது முன்னிலையிலும் பறை இசை முழங்க, கவுசல்யாவும், சக்தியும் இணையேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...